ஆண்களுக்கான விநோத விழா "1000 கிலோ கறி.. 4000 கிலோ அரிசி'.." மதுரையில் கம கம கறி விருந்து | Madurai
மதுரை திருமங்கலம் அருகே ஆண்கள் மட்டுமே கொண்டாடும் விநோத அசைவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது... அனுப்பபட்டி கிராமத்தில் காவல் தெய்வம் கரும்பாறை முத்தையா கோவில் திருவிழாவை ஒட்டி கருப்புக் கிடாய்கள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படும். நள்ளிரவு 1 மணி வரை கிடாய் வெட்டப்பட்டு, 4 ஆயிரம் கிலோ அரிசி, ஆயிரம் கிலோ கறியில் கமகமவென கறி விருந்து அசத்தலாக தயாரானது... 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர்... இந்த விநோத திருவிழாவில் கறி விருந்து முடிந்ததும் இலையை எடுக்க மாட்டார்கள்... இலை காய்ந்ததும் ஒரு வாரம் கழித்து பெண்கள் இங்கு சாமி கும்பிடுவது வழக்கம்...