பரபரப்பான சாலை நடுவே ரிலாக்ஸ் பண்ணும் மாடுகள்... அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள் | Madurai
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளின் நடுவே மாடுகள் கூட்டம் கூட்டமாக படுத்துக்கொள்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆனையூர், வள்ளுவர் காலனி, தபால்தந்திநகர், குலமங்கலம் சாலை, பனங்காடி சாலைகளில் மாடுகள் கூட்டம் கூட்டமாக பகலிலும், இரவிலும் படுத்துக்கொள்கிறது. இந்த மாடுகளால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால், சம்பந்தப்பட்ட கால்நடையின் உரிமையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், கால்நடை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்