உல்லாச வாழ்க்கைக்கு ஆசையாக சென்றவருக்கு அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு சம்பவம்

Update: 2024-12-16 01:49 GMT

மதுரை சோழவந்தானில் கூலித்தொழிலாளி கொலை வழக்கில், உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு அவரது கள்ளக் காதலியே கொலை செய்த‌து அம்பலமாகியுள்ளது.

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 12ம் தேதி வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து, விசாரணை நடத்திய போலீசார், கணேசனை கொலை செய்ததாக அதே ஊரை சேர்ந்த பாண்டியம்மாளை கைது செய்தனர். கணேசனும், பாண்டியம்மாளும் கடந்த 5 ஆண்டுகளாக தகாத உறவில் இருந்த‌தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவம் நடந்த அன்று, கணேசனின் மனைவி வேலைக்கு சென்றதும், வீட்டுக்கு சென்ற பாண்டியம்மாள், வெளியூர் சென்று வாழலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு கணேசன் மறுப்பு தெரிவித்த‌தால், வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரத்தில் கத்தியால் பாண்டியம்மாள் குத்தி கொலை செய்த‌தாக கூறப்படுகிறது. இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்த‌தாகவும் தெரிகிறது. இதையடுத்து பாண்டியம்மாளை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்