மாமியார் இறப்புக்கு வந்த மருமகனுக்கு கத்திக்குத்து.. சென்னையில் அதிர்ச்சி

Update: 2024-12-16 04:18 GMT

சென்னை வியாசர்பாடியில், மாமியார் இறப்புக்கு வந்த மருமகன் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மாமியார் லட்சுமி, வியாசர்பாடி பி காலனியில் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக லட்சுமி உயிரிழந்ததை அடுத்து, இறுதிச்சடங்கில் முத்துக்குமார் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டார். இந்நிலையில், முத்துக்குமாருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான தர்மலிங்கம் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இறுதிச்சடங்கிற்கு வந்த உறவினர்கள், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அப்போது தர்மலிங்கம், அருகில் இருந்த தனது வீட்டிற்கு சென்று சிறிய கத்தியை எடுத்து வந்து முத்துக்குமார் வயிற்றில் குத்திவிட்டு தப்பி ஓடினார். இதில் படுகாயமடைந்த முத்துக்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முத்துக்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த தர்மலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்