பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாத 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் - மதுரையில் தொடரும் போராட்டம்

Update: 2024-11-14 03:37 GMT

 மதுரை அருகே இந்து காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் கேட்டு, 7-ஆவது நாளாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாவட்டம், சத்தியமூர்த்தி நகரில் இந்து காட்டுநாயக்கன் சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றர். இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எஸ்.டி. இந்து காட்டு நாயக்கன் என்ற பெயரில் சாதிச் சான்றிதழ் கேட்டு, 7-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளி, கல்லூரிகளுக்கு அவர்கள் அனுப்பவில்லை. இந்நிலையில், சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் விண்ணப்பம் மீது மாவட்ட ஆட்சியர் சங்கீதா விசாரணை நடத்தி, அவருக்கு எஸ்.டி. சாதிச் சான்று வழங்க முடியாது என தெரிவித்து விட்டார். இதனால் அவருக்கு சாதிச்சான்று கிடைப்பது கேள்விக் குறியாகி உள்ளது. மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்