வயிற்று வலியால் துடித்த மகள்.. ஹாஸ்பிட்டல் சென்று பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

வயிற்று வலியால் துடித்த மகள்.. ஹாஸ்பிட்டல் சென்று பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-11-09 02:33 GMT

வயிற்று வலியால் துடித்த மகள்.. ஹாஸ்பிட்டல் சென்று பார்த்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

மதுரை புறநகர் பகுதியை சேர்ந்த தம்பதியின் 17 வயது மகள், அங்குள்ள உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். அந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால்,

பெற்றோர் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.அப்போது அவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர், புகார் அளித்தநிலையில், மாணவியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், கண்ணனேந்தல் பகுதியில் உள்ள கோவில் பூசாரி ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்து அவரை கர்ப்பமாக்கியதாக தெரிகிறது. போலீசார் அந்த பூசாரியை பிடித்து விசாரித்தனர். அப்போது, கண்ணனேந்தல் பகுதியை சேர்ந்த 45 வயதான சசிக்குமார், ஆட்டோ டிரைவராக இருந்து அதன் பின்னர்,அந்த பகுதியில் கோவிலை அமைத்து அதன் நிர்வாகியாகவும், பூசாரியாகவும் இருந்து வருகிறார்.இந்த நிலையில், மாணவியின் வறுமையை பயன்படுத்தி படிப்புக்கு பண உதவி செய்வதாக கூறி,கோவிலுக்கு அழைத்துள்ளார்.விடுமுறை நாட்களில் கோவிலுக்குச் சென்ற மாணவியை கோவிலை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை செய்ய வைத்துள்ளார்.இந்த வாய்ப்பை பயன்படுத்திய அவர்,மாணவியை கர்ப்பமாகியது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்