குற்றாலத்தில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் மெயின் அருவியை முழுமையாக அடைக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்... தென்காசி மாவட்டத்தில் கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்... அந்த வகையில் குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்ட ஆட்சியர் கடைகளை திறக்க வேண்டாம் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியதுடன் அருவியை முழுமையாக அடைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.