வீட்டுகளை சூழ்ந்து சீறி பாய்ந்த வெள்ளம்.. - சிறுமியை மீட்டு தூக்கி வந்த தீயணைப்புத்துறையினர்
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வெள்ளத்தில் தத்தளித்த மக்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், வீரநத்தம் கிராமத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. முட்டியளவு தண்ணீர் தேங்கியதால் மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில், தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி, பொதுமக்களை மீட்டதோடு, சிறுவர்களை அன்போடு அரவணைத்து முகாமுக்கு அழைத்து சென்றனர்.