திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் மகா தீபத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. வழக்கமாக இந்த வழித்தடத்தில் 12 ரயில்கள் இயக்கப்படும் நிலையில், மொத்தமாக 30 ரயில்கள் விழுப்புரம் காட்பாடி சென்னை மார்க்கத்தில் இயக்கப்பட்டது. திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டும், ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.