சென்னையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய நபர்.. - ரப்பர் படகு மூலம் மீட்ட திக்..திக்..காட்சி
சென்னை மணலி புதுநகர் கொசஸ்தலை ஆற்றில் சிக்கிய நபரை தீயணைப்புத்துறை படகு மூலம் பத்திரமாக மீட்டனர். பூண்டி ஏரியில் இருந்து 16,500 கனஅடி நீர் திறக்கப்பட்டதால், மக்கள் கரையோரம் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், மணலி புதுநகரைச் சேர்ந்த சுரேஷ் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். ஆற்றில் நீர் ஆர்ப்பரித்து சென்றதால், கரைக்கு திரும்பமுடியாமல் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தார். பின்னர் மீட்புபடையினர் ரப்பர் படகு மூலம் சென்று சுரேஷை மீட்டனர்.