கொசஸ்தலை ஆற்றின் கோர முகம்...தீவாக மாறிய 2 கிராமங்கள்.. மக்களின் அவல காட்சிகள்
கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொன்னேரி அருகே இரு கிராமங்கள் தனித்தீவாக மாறின. பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 16500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டதால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் கிராமங்களுக்கு இடையேயான தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் இரண்டு கிராமங்கள் தீவாக மாறியதால், அத்தியாவசிய தேவைக்கு மக்கள் படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உயர்மட்ட மேம்பால பணியை விரைந்து முடிக்குமாறு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.