பள்ளி கழிவறையை சுத்தம் செய்த மாணவிகள்.. ``தலைமை ஆசிரியர் தான் காரணம்?''
கரூர் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் மாணவிகளை வைத்து கழிவறையை சுத்தம் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காளிபாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை பள்ளியில் படிக்கும் மாணவிகளை கொண்டு தலைமை ஆசிரியர் சுத்தம் செய்ததாக புகார் எழுந்தது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோ வெளியான நிலையில், பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்து, மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.