ஸ்ரீவைகுண்டத்தில் வெட்டப்பட்ட பள்ளி மாணவனிடம் நேரில் விசாரணை செய்த அதிகாரிகள்
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஓடும் பேருந்தில் 11ஆம் வகுப்பு மாணவன் வெட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விசாரணையை தொடங்கியது. நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவரை ஆணைய இயக்குனர் ரவிவர்மன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். முன்னதாக நெல்லை வண்ணாரப்பேட்டை சுற்றுலா மாளிகையில் வைத்து இந்த வழக்கு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.