டாஸ்மாக் நிர்வாகம் மனு - இன்று விசாரணை | TASMAC | Chennai HC | ThanthiTV

Update: 2025-03-20 02:12 GMT

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக்கோரி டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் 1,000 கோடி ரூபாய்க்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்புள்ளதாக அமலாக்கத்துறை சமீபத்தில் தெரிவித்தது. இந்நிலையில், அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்