FB-யில் வந்த வீடியோவை பார்த்து முதியவர் எடுத்த முடிவு... கடைசியில் உயிரையே விட சென்றதால் அதிர்ச்சி

Update: 2024-09-04 07:00 GMT

கரூரில் பழைய நாணயங்களுக்கு அதிக பணம் தருவதாக கூறி, முதியவரிடம் 22 ஆயிரம் ரூபாய் பண மோசடி செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி அடுத்த பெரிய திருமங்கலம் கிராமத்தை சேர்ந்த முதியவர் முருகேசன். பெட்ரோல் பங்கில் ஊழியராக பணியாற்றும் இவர், பழைய நாணயங்களை சேகரிப்பதில் ஆர்வம் கொண்டவர். பேஸ்புக்கில், பழைய நாணயங்களுக்கு அதிக பணம் கொடுக்கப்படும் என்ற விளம்பரத்தை பார்த்து, தன்னிடம் இருந்த பழைய நாணயங்களை போட்டோ எடுத்து அனுப்பியுள்ளார். அவர்கள் இந்த பழைய நாணயங்களுக்கு 36 லட்சம் ரூபாய் தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி, சுமார் 22 ஆயிரம் ரூபாய் பணத்தை சேவை கட்டணமாக வசூலித்துள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முருகேசன் த*கொலைக்கு முயற்சித்துள்ளார். அவரை மீட்ட அவரது பெட்ரோல் பங்க் உரிமையாளர், சைபர் கிரைமில் புகார் அளிக்க உதவியுள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்