லட்ச தீபங்களால் ஒளிர்ந்த மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரை குளம்.. - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி...
மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் லட்ச தீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெற்றது. கோவில் இணை ஆணையர், பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று பொற்றாமரைக் குளம், அம்மன், சுவாமி சன்னதிகள் உள்ளிட்ட பகுதிகளில் லட்ச தீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.