சர்ச்-ல் தொடங்கிய பிரச்சனை...வீட்டிற்கு வந்த கொலை மிரட்டல் - அதிர்ச்சி... பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே கல்குறிச்சி பகுதியில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆலய பங்கு பேரவை நிர்வாகி தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட ராஜேந்திரன் என்பவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது ஆதரவாளர்களுடன் ஆலய பங்குதந்தை ஜார்ஜ்பொன்னையா வீட்டிற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.