கன்னியாகுமரியில் நள்ளிரவில் ரோந்து சென்ற ஏஎஸ்பி வாகனம் கல்வீசப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நாகர்கோவில் டெரிக் சந்திப்பு வழியாக நேற்று இரவு நாகர்கோவில் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் லலித்குமார் அரசு வாகனத்தில் ரோந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக உயர் ரக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் ஏஎஸ்பி வாகனத்தின் மீது கல் வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.. உடனே அவர்களை போலீசார் துரத்திச் சென்ற நிலையில், சமபவத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரான மணலிக்கரையை சேர்ந்த செர்லின் ஜோஸைக் கைது செய்தனர்... அவருடன் சென்ற ஜெனிஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இவர்கள் இருவரும் குடி போதையில் இருந்தது தெரிய வந்துள்ளது...