இரவில் மாணவி சொன்ன ஒற்றை வார்த்தை - +2 மாணவியை வீட்டிற்குள் அடைத்து பலாத்காரம் செய்த இளைஞர்
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவரின்
இளைய மகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வருகிறார். ஆசிரியை மற்றும் மாணவிகளுடன் கைப்பந்து விளையாட்டு போட்டியில் பங்கேற்க திருச்சி சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் பள்ளி அருகே, தந்தையின் வருகைக்காக மாணவி காத்திருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பைசல்கான் என்பவரிடம், இயற்கை உபாதை கழிக்க முடியாமல் சிரமப்படுவதாக மாணவி கூறியுள்ளார். இதையடுத்து மாணவியை
வீட்டிற்கு அழைத்துச் சென்ற பைசல்கான், அறையில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், மார்த்தாண்டம் மகளிர் போலீசார், மாணவியை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். போக்சோ வழக்கு உள்பட 3 பிரிவில் வழக்குப்பதிவு செய்த மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த பைசல்கானை கைது செய்து நாகர்கோவில் மத்திய சிறையில் அடைத்தனர்.