அதலபாதாளத்தில் கோலிவுட்... 241 படங்களில் வெறும் 7% மட்டுமே வெற்றி... இத்தனை கோடி நஷ்டமா? ஷாக் ரிப்போர்ட்
2024- ஆம் ஆண்டு தமிழில் மட்டும் மொத்தம் 241 படங்கள் திரைக்கு வந்தன. இதில் 223 படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை சந்தித்து இருப்பது திரைத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஞ்சியுள்ள 18 படங்கள் மட்டுமே லாபம் சம்பாதித்து, அதை வெளியிட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் நல்ல வசூலை ஈட்டி உள்ளது.
இந்த ஆண்டு வெளிவந்த 241 படங்களில் 186 படங்கள் சின்ன பட்ஜெட் படங்களாகும். சிறு பட்ஜெட் படங்கள் ரூபாய் 2 கோடி முதல் ரூபாய் 5 கோடி செல்வில் எடுக்கப்பட்டு உள்ளதால், அந்த படங்களுக்கு மட்டும் சுமார் ரூபாய் 400 கோடி செலவாகி உள்ளது.
அதே நேரத்தில் விஜய் நடித்த தி கோட், சிவகார்த்திகேயனின் அமரன், தனுஷின் ராயன் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் ரூபாய் 50 முதல் ரூபாய் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு உள்ளன.
சுந்தர் சி இயக்கிய அரண்மனை-4, விஜய் சேதுபதியின் மகாராஜா, கார்த்தி நடித்த மெய்யழகன் ஆகியவை பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் ஆகும்.
சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களான வாழை, டிமாண்டி காலனி-2, பிளாக், பிடி, கருடன், லப்பர் பந்து, லவ்வர் ஆகிய படங்களும் நல்ல வசூலை குவித்துள்ளன.
இந்த ஆண்டு வெளியான படங்களில் 93 சதவீத படங்கள் தோல்வியை தான் சந்தித்து உள்ளன. எஞ்சியுள்ள 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளன.
இந்த ஆண்டு அதிக வெற்றிப்படங்களை கொடுத்தது மலையாள சினிமாவாக இருந்தாலும், அங்கும் 700 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது