நாட்டுக்கே வழிகாட்டிய இடம்... சிலாகித்து சொன்ன PM மோடி... உடனே ஸ்பாட்டுக்கு போன் ஆளுநர் ரவி

Update: 2024-12-31 17:36 GMT

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் குடவோலை கல்வெட்டுள்ள வைகுண்ட பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். இங்கு குடவோலை முறையில் தேர்தல் நடந்ததற்கான வழிமுறைகள் குறித்து பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசியதை தொடர்ந்து இந்த கல்வெட்டுகள் குறித்து அறிய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக ஆளுநர் ரவி தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்ததோடு கல்வெட்டுகளையும் பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்