கோலிவுட் வசூலை மலையாளத் திரைப்படங்கள் தட்டி தூக்கியதாக பேசப்பட்ட நிலையில், மலையாளத் திரையுலகிலோ 700 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக அதிருப்தி தெரிவித்தனர் தயாரிப்பாளர்கள்...
இந்நிலையில் தான், கோலிவுட்டுக்கும் இதே கதி தான் என புலம்புகின்றனர் தமிழ் திரையுலக திரையரங்க விநியோகஸ்தர்கள்..
ஆண்டின் தொடக்கத்தில் பெரிதளவில் படங்கள் இல்லாமல் கோலிவுட் காத்து வாங்கிய நிலையில், இந்த ஆண்டு முழுவதும் 241 படங்கள் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் இதில் 223 படங்களும் தோல்வியையே தழுவியதாகவும், எஞ்சியுள்ள 18 படங்கள் மட்டுமே லாபத்தை சம்பாதித்துள்ளதாகவும் திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆண்டு வெளியான 241 படங்களில் 186 படங்கள் சின்ன பட்ஜெட் படங்களாகும். இவை 2 முதல் 5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளதால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மட்டும் சுமார் 400 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பெரிய பட்ஜெட் படங்கள் 50 கோடி முதல் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளன.
இப்படி அதிக பொருட்செலவில் வெளியான ரஜினியின் வேட்டையன், விஜய் நடித்த தி கோட், சிவகார்த்திகேயனின் அமரன், சுந்தர் சி இயக்கிய அரண்மனை 4, ஆகியவையும் பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் வெற்றி கண்டுள்ளன.
சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்களான வாழை, டிமாண்டி காலனி 2, பிளாக், கருடன், லப்பர் பந்து, லவ்வர், மகாராஜா, மெய்யழகன் ஆகிய படங்கள் நல்ல வசூல் கண்டுள்ளன .
ஆனாலும், இந்த ஆண்டு வெளியான படங்களில் 93 சதவீத படங்கள் தோல்வியை தான் சந்தித்துள்ளன. எஞ்சியுள்ள 7 சதவீத படங்கள் மட்டுமே வெற்றியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.Not only Malayalam cinema, but also the Tamil film industry is suffering losses.