இளைஞர்களை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிய மக்கள் - அரசு ஹாஸ்பிடலில் பரபரப்பு

Update: 2024-11-25 05:35 GMT

இளைஞர்களை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிய மக்கள் - அரசு ஹாஸ்பிடலில் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். பள்ளிவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுபோதையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நண்பரை பார்க்கச் சென்றபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் அலறி அடித்து ஓடினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள், இளைஞர்களை மடக்கிப்பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 2 இளைஞர்களையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் ​சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்