மாணவி பாலியல் வன்கொடுமை..! "எங்கே அந்த முக்கிய குற்றவாளி.?" பரபரப்பை கிளப்பிய மாதர் சங்க உறுப்பினர்
கன்னியாகுமரியில் பிளஸ் 2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியை போலீசார் தப்ப வைத்துள்ளதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கில் பைசல்கான் என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் வழக்கில் முக்கிய குற்றவாளியான ரெதீஷ்குமார் என்பவர் சேர்க்கப்படவில்லை என்றும், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டிய நபரை தப்பவைத்தது போலீசார் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முதல் குற்றவாளியை தப்பவிட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்க உறுப்பினர் லீமாரோஸ் வலியுறுத்தியுள்ளார்.