வாடகை தராததால் ஹவுஸ் ஓனர் எடுத்த வித்தியாசமான முடிவு.. தீவு போல் மாறிய வீடு.. காஞ்சியில் பரபரப்பு

Update: 2024-06-19 03:50 GMT

காஞ்சிபுரம் வானவில் நகரில் சீனிவாசன் என்பவர், தனது வீட்டின் மாடி குடியிருப்பை வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில், பக்கவாதம் ஏற்பட்டு வேணுகோபால் படுத்த படுக்கையானதால், வாடகை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மாதங்களாக வாடகை செலுத்தாத‌தால், வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி அவகாசம் வழங்கிய சீனிவாசன், வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். ஆனால், வாடகையும் செலுத்தாமல், வீட்டையும் காலி செய்ய மறுத்து காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதையடுத்து, வீட்டின் மாடிக்கு செல்லும் படிக்கட்டுகளை, ஆட்கள் மூலம் சீனிவாசன் உடைத்து எடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வேணுகோபால் குடும்பத்தினர் காவல்துறைக்கு புகார் அளித்தனர். விரைந்து சென்ற காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் மூலம் ஏணி வைத்து மாடியில் இருந்தவர்களை மீட்டு, அவர்களது உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்