இறந்தவரின் சடலத்தை பார்த்து அழுத நொடி ஊரே அதிர நடந்த பயங்கரம் - உடனே வந்த ஆம்புலன்ஸ்
மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த சம்பத் உடல் சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் தும்பை கிராமத்திற்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், உடல் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... உடலை சொந்த ஊரில் உள்ள வீட்டின் முன்பு உறவினர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டிருந்த நிலையில், ஐஸ் பெட்டியில் இருந்து மின்சாரம் கசிந்ததில் 5 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது... இதனிடையே சம்பத்தின் உடலுக்கு சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன், வருவாய் கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.