நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 5 நாட்கள் பெய்த தொடர் கனமழையால் ஏரி மேல்கரை மயான சாலையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இடுப்பளவு தண்ணீரில் சடலங்களை தூக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மயானத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்தி தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நகராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.