"காரம் குறையவில்லை" - ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு சொன்ன பரபரப்பு கருத்து
தவறான முடிவுகளுக்கு உச்சநீதிமன்றம் அங்கீகாரம் கிடைக்கும் நிலை, நாட்டில் இருப்பதாக, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு விமர்சனம் செய்துள்ளார். பழ கருப்பையா எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது தவறு என்றும், அரசு எடுத்த நடவடிக்கை செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்ததும் தவறு என்றும் கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் 400 சீட்டுகள் பெறுவோம் என்றவர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டதாக விமர்சித்த அவர், காரம் குறையவில்லை என்று விமர்சித்தார்.