பூமிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கும் வீடு - உயிரை கையில் பிடித்தபடி கதறி அழும் பெண்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலு, முத்துலட்சுமி தம்பதி. இவர்களுக்கு
ஒரு மகளும், ஒரு மகனும் உள்ள நிலையில் அப்பகுதியில் பூக்கடை ஒன்றைநடத்தி வருகின்றனர். அதே பகுதியில் இவர்களுக்கு சொந்த வீடு உள்ளது. கட்டப்பட்டு 20 ஆண்டுகள் ஆன இந்த வீடானது, தற்போது சாய்ந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. குளத்தை ஆழப்படுத்தியதே இதற்கு காரணம் என பாதிக்கபட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போதுவீட்டில் இருந்த பொருள்களை அப்புறப்படுத்தி குடும்பத்துடன் கோயிலில் தங்கியுள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளித்திருப்பதாகவும் உடனடியாக அதிகாரிகள் பார்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.