இன்ஸ்டாவில் பேசிய இளைஞர்.. திடீரென வீட்டிற்கு வந்து நின்றதும் அலறிய 15 வயது சிறுமி

Update: 2025-01-03 09:55 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவியிடம் வீடு புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கூடலூர் கிராமத்தை சேர்ந்த விமல்ராஜ் என்பவருடன் 15 வயதான பள்ளி மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு பேசி வந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த மாணவியை பார்ப்பதற்காக மாணவியின் வீட்டுக்குள் நுழைந்த விமல் ராஜ், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வந்து விமல் ராஜை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்