மோடிக்கு எதிராக திரும்பிய அமெரிக்க `Deep State’ - உலகே அதிர்ந்த ஆட்சி கவிழ்ப்பில் இதே சதி திட்டம்?

Update: 2024-12-08 05:10 GMT

மோடிக்கு எதிராக திரும்பிய அமெரிக்க `Deep State’ - உலகே அதிர்ந்த ஆட்சி கவிழ்ப்பில் இதே சதி திட்டம்?

இந்தியா Vs அமெரிக்கா வெடிக்கும் புது யுத்தம்

இந்தியாவை சீர்குலைக்க அமெரிக்க அரசின் செல்வாக்கான சக்திகள் வேலைபார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், இந்தியா - அமெரிக்க உறவில் நடப்பது என்ன என்பதை விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு

அமெரிக்க அரசாங்க அமைப்புகள் மற்றும் Deep State அதாவது அமெரிக்க அரசின் செல்வாக்கான சக்திகள் இந்தியாவை சீர்குலைக்க முயற்சி செய்கிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருக்கிறது பாஜக.

இந்த குற்றச்சாட்டு சர்வதேச ஊடகங்களின் பிரதான செய்தியாகியிருக்கிறது.

வலுவான உறவை கொண்டிருக்கும் இந்தியாவும், அமெரிக்காவும் அவ்வப்போது கருத்து வேறுபாடுகளை வெளிக்காட்டினாலும், உறவை மேலும் வலுவாக்க உறுதிகொண்டுள்ளது.

இந்த சூழலில் ஆளும் பாஜக வைத்திருக்கும் பகிரங்க குற்றச்சாட்டு எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.

பாஜக குறிப்பிடும் Deep State சக்திகள்.. வங்கதேசத்தில் ஹசினா அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட போது குற்றச்சாட்டுக்கு உள்ளானவை.

இந்தியா - சீனாவுடன் உறவுகளை பேணிய ஹசினா, அமெரிக்காவுக்கு இசைந்து கொடுக்கவில்லை. 2023 ஏப்ரலில் வங்கதேச நாடாளுமன்றத்திலேயே அமெரிக்கா என்னை பிரதமர் அரியணையில் இருந்து அகற்ற விரும்புகிறது என பேசியிருந்தார் ஹசினா.

சீனாவை எதிர்கொள்ள வங்க கடலில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவை ராணுவ தளம் அமெரிக்க அமெரிக்கா வலியுறுத்தியதாகவும், அதற்கு ஹசீனா செவி சாய்க்காததால் அமெரிக்கா உள்நாட்டில் சதி செய்ததாகும் அரசியல் வல்லுநர்களால் குற்றம் சாட்டப்பட்டது.

இப்போது அந்த அமெரிக்க அரசின் செல்வாக்கான சக்திகள் மோடியை குறிவைப்பதாக சொல்கிறது பாஜக.

அமெரிக்கா, இந்திய உள்நாட்டு அரசியலில் தலையிடுவது பெரும்பாலும் அங்கு ஆட்சியிலிருக்கும் அரசாங்கத்தை பொறுத்தது.

2020-ல் பைடனின் ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தபோது, மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், ஜனநாயக மதிப்பு என பைடன் அரசாங்கம் அரசியல் விவகாரங்களில் அணுகுமுறையை மாற்றலாம் என்றே பேசப்பட்டது.

அதுபோலவே இந்தியாவில் மனித உரிமைகள் மீறல், மத சுதந்திரம், கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் வங்கி கணக்கு முடக்கம் உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்கா வெளியிட்ட கருத்துக்கள் மோடி அரசாங்கத்துடன் இருக்கும் அதிருப்தியாகவே பார்க்கப்பட்டது.

அரசியல் விவகாரம் தவிர்த்து வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு விவகாரங்களில் பைடன் அரசுடன் நல்ல உறவையே கொண்டிருந்தது இந்தியா. இதுவே குடியரசு கட்சியை பொறுத்த வரையில் பெரும்பாலும் அரசியல் கருத்து மோதல் இருப்பது இல்லை.

அந்த வகையில் பைடனுடன் ஒப்பிடுகையில் டிரம்ப் - மோடி இடையிலான நட்பு ஆழமானதாகவே பார்க்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு டெக்சாசில் மோடியும், டிரம்பும் பங்கேற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சி மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது. அங்கு பேசிய பிரதமர் மோடி... ஆப் கி பார் டிரம்ப் சர்கார் என்றது அனைவரையும் புருவம் உயர்த்த செய்தது.

அதேவேளையில் வர்த்தகம் உள்ளிட்ட விவகாரங்களில் சற்று பிணக்கு இருக்கும். இப்போது டிரம்ப் வெளிப்படையாகவே இந்திய இறக்குமதிக்கு வரி உயர்வு மிரட்டல்களை தொடங்கிவிட்டார்.

அரசியல் உள்ளடிகளைவிட வர்த்தகம் தொடர்பான சவால்கள் சமாளிக்க கூடியவையே என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.

அமெரிக்கா, இந்தியா பலவீனமாக இருப்பதையே விரும்புகிறது என்ற குற்றச்சாட்டுகள் சமீபகாலமாக தொடர்கிறது.

ஆனால் ஒருவருடனான நட்பு மற்றும் நெருக்கம் காரணமாக எங்கள் கொள்கைகளை விட்டுவிட முடியாது என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறியதும் கவனம் பெற்றது.

அமெரிக்க அரசின் செல்வாக்கான சக்திகள் என்று இப்போது பாஜக கைக்காட்டுவது, அந்நாட்டு தொழில் அதிபர் ஜார்ஜ் சோரோஸின், அமைப்பாக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை என்ற புலனாய்வு பத்திரிக்கையைதான்.

இதில் அதானி குழுமத்திற்கு எதிராக ஜார்ஜ் சோரோஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அந்நிறுவனமும், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக வைக்கும் குற்றச்சாட்டுக்கு காங்கிரசும் பதிலளித்து வருகிறது.

கனடா விவகாரமாக இருந்தாலும் சரி, ரஷ்யா விவகாரமாக இருந்தாலும் சரி இந்தியா அணிசேரமால் தனது நிலைப்பாட்டில் ஸ்திரமாக இருக்கிறது.

இப்போது மோதல் வெளிப்படையாக தெரிவது விரைவில் வீட்டுக்கு போகும் பைடன் அரசாங்கம் அரசியல்ரீதியாக கக்கும் கசப்பா? என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

வங்கதேச போர் தொடங்கி வரலாற்றில் இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் பலநேரங்களில் அவநம்பிக்கை நிலவியுள்ளது. இப்போதும் அதுபோல சூழல் தென்படும் வேளையில் பைடன் என்ன செய்யப்போகிறார்? என்ற எதிர்பார்ப்பே எழுந்துளளது.

Tags:    

மேலும் செய்திகள்