ஆளுநர் ஆர்.என் ரவியின் உருவப்படத்தை எரித்து மாணவர்கள் போராட்டம்...

Update: 2025-01-08 12:02 GMT

யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் செய்வதற்கு வரைவு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய கல்விக் கொள்கையை பின்பற்றாத பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பட்டம் செல்லாது என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தினர். போராட்டத்தின் போது, ஆளுநர் ஆர்.என் ரவியின் உருவப்படம், யுஜிசி அறிக்கையை மாணவர்கள் தீ வைத்து எரித்தனர். மாணவர்கள் போராட்டத்தால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்