லாரியில் இருந்து வந்த துர்நாற்றம்..மடக்கி பிடித்த போலீசுக்கு ஷாக்..கேரளா-தமிழக எல்லையில் பரபரப்பு.

Update: 2025-01-08 11:58 GMT

கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவற்றை வாகனங்களில் ஏற்றி, குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வந்து, நீர் நிலைகள் விவசாய நிலங்களில் கொட்டி செல்லும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு, கேரளாவில் இருந்து கொல்லங்கோடு வழியாக குமரி மாவட்டத்திற்குள் காய்கறி கழிவுகள் ஏற்றி வந்த லாரி ஒன்றை நித்திரவிளை அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, பறிமுதல் செய்தனர். வாகனத்தை ஓட்டி வந்த பணகுடி பகுதியை சேர்ந்த சிவா மற்றும் கிளீனர் மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை மூலம், வள்ளியூரை சேர்ந்த ஜோஸ்வா என்ற லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்