வலி தாங்க முடியாமல் 10 பேரை போனில் அழைத்த பெண்.. உயிர் பயத்தில் டாக்டர்.. சென்னை ஹாஸ்பிடலில் திடுக்
சென்னையில் பிரபல தனியார் சித்த ஆயுர்வேத மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறி தகராறு செய்த கும்பல், மருத்துவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்..
சென்னை, வடபழனி 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் சித்த ஆயுர்வேத மருத்துவமனையில்தான் இந்த களேபர சம்பவம்..
திருவேற்காடு பகுதியை சேர்ந்த கல்பனா என்ற பெண் கடந்த 12 ஆம் தேதி தன் தோள்பட்டை காயத்திற்காக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்ததிருக்கிறார்..
அப்போது, பணியில் இருந்த மருத்துவர் செளமியா.. பெண்ணை பரிசோதித்து ஆயுர்வேதா மற்றும் வர்ம சிகிச்சைக்கு பரிந்துரை செய்ததாக தெரிகிறது...
ஆனால், தனக்கு மருந்துகள் வேண்டாம் எனவும்.. கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட வர்மம் மற்றும் மசாஜ் சிகிச்சை மட்டும் மேற்கொள்ளும்படி மருத்துவரிடம் கல்பனா முறையிட்டதாக சொல்லப்படுகிறது...
கூடவே, அதற்கு மருத்துவர் செளமியா மறுப்பு தெரிவித்ததாகவும், அப்பெண் வற்புறுத்தி கேட்டதன் பேரிலே அவருக்கு வர்ம சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது...
இந்நிலையில், திடீரென சிகிச்சையின் போது வலி தாங்க முடியாமல் கை வலிப்பதாக கூறி கத்தி கூச்சலிட்டிருக்கிறார் கல்பனா.
தொடர்ந்து, மருத்துவர் தனக்கு தவறான சிகிச்சை மேற்கொண்டதாலே தனது வலது கையில் தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்பட்டு இருப்பதாக கூறி, தொலைபேசி மூலம் தனது உறவினர்களை அவர் அழைக்கவே பெரும் பரபரப்பாகி இருக்கிறது..
இந்த பரபரப்புக்கு இடையே, சில நிமிடத்திற்குள் மருத்துவமனை வளாகத்தில் சூழ்ந்த பத்திற்கும் மேற்பட்ட நபர்கள்.. மருத்துவரையும், அங்கு பணியில் இருந்த இருந்தவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் போலீசில் புகார் தெரிவிக்கப்படவே, சம்பவம் குறித்தான விசாரணையை சென்னை, வட பழனி போலீசார் முடுக்கி விட்டிருக்கும் சூழ்நிலையில், இந்த ஒட்டு மொத்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது...