சென்னையில் 2 குழந்தைகள் துடிதுடித்து பலி.. பெற்றோர் எங்கே? 5 கையெழுத்துக்கு காத்திருக்கும் போலீஸ்
சென்னை, குன்றத்தூரில் வசித்து வந்த கிரிதரன் வீட்டில், எலி தொல்லைக்காக எலி மருந்து வைத்ததில், நெடி தாங்காமல் அவரது இரண்டு குழந்தைகள் பலியானார்கள். கணவன், மனைவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குழந்தைகளின் உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று உடல்களை பிரேத பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கிரிதரனின் உறவினர்கள் ஐந்து பேர் கையொப்பமிட்ட பிறகு பிரேத பரிசோதனை இன்று செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.