ஆரணி அருகே கீழ்நகர் கிராமத்தை சேர்ந்த கங்கோதரி என்பவர், அங்குள்ள அரசு துவக்க பள்ளியில் காலை உணவு திட்ட பணியாளராக உள்ளார். இவர், தன்னை வேலையை விட்டு அனுப்ப முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வற்புறுத்தியதாகவும், அசிங்கமாக பேசியதாகவும் குற்றம் சாட்டி, ஏலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, ஆரணி அரசு மருத்துவமனையில் அவர், அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஏழுமலை என்ற முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தொந்தரவு செய்ததாகவும், எழுதிக் கொடுத்துவிட்டு செல்லுமாறு வட்டார மேலாளர் பன்னீர்செல்வம் கூறியதாகவும் கங்கோதரி குற்றம் சாட்டினார்.