நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஆபத்தான நிலையில் இருந்த மரங்களை அகற்றும் போது, மரத்தின் ஒரு பகுதி பள்ளி மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மலைபாதையில் உள்ள பர்லியார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியை சுற்றியுள்ள ஆபத்தான மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது மரத்தின் ஒரு பகுதி விழுந்ததில், பள்ளியின் ஒரு பகுதி லேசாக சேதம் அடைந்தது. சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட குன்னூர் சார் ஆட்சியர், மரங்களை பாதுகாப்புடன் அகற்றுமாறு அறிவுரை வழங்கினார். பள்ளியில் குழந்தைகள் யாரும் இல்லாதபோது, மரம் வெட்டும் பணியை மேற்கொண்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.