வேறு ஒருவர் பைக்கில் சென்ற மனைவி..ஸ்குரு டிரைவரை இறக்கிய கணவன்..போலீசை பார்த்ததும் போட்ட பாவநாடகம்..
கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வந்த மனைவியை கணவர் ஸ்குரு டிரைவரால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை அருகே வண்டிக்கார நகர் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். இவரது மனைவி பிருந்தா. இந்த தம்பதியினருக்கு மகள் மற்றும் மகன் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மணிகண்டனை விட்டு பிருந்தா பிரிந்த நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக நாமக்கல்லில் தனியாக இருந்து வந்துள்ளார்.இரு குழந்தைகளையும் மணிகண்டன் கவனித்து வந்ததாக தெரிகிறது.இந்நிலையில், மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தில் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு வந்துள்ளார். நாமக்கல் மோகனூர் சாலையில், பிருந்தா வேறு ஒருவரின் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, இருசக்கர வாகனத்தை மணிகண்டன் மறித்து பிருந்தாவை,தான் மறைத்து வைத்திருந்த ஸ்குரு டிரைவரால் தலையில் குத்தியுள்ளார். இதையடுத்து ரத்த வெள்ளத்தில் பிருந்தா சாலையில் சரிந்து கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.