வீட்டுடன் கூடிய நிலத்தை விஏஓ மோசடி செய்ததாக கூறி.. 70 வயது மூதாட்டி ஒருவர் கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவலக வாசலில், போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மேலக்கழனி கிராமத்தைச் சேர்ந்தவர் சரோஜா. 70 வயது மூதாட்டியான இவர், கணவரை இழந்து தனியே வசித்து வருகிறார். மூதாட்டி வசித்து வரும் 3 செண்ட் வீட்டு மனையானது, கடந்த 1998இல் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரிடமிருந்து முறைப்படி பத்திரப்பதிவு செய்து வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அண்ணாமலையின் மகன் கமல் ராஜ்... பொன்னேரி தாலுகா பிரளயம் பாக்கம் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் நிலையில், அவர் போலி ஆவணம் மூலம் தனது வீட்டுமனையை பாகப்பிரிவினை செய்து, அவரது குடும்பத்தார் பெயரில், பத்திரப்பதிவு செய்திருப்பதாக மூதாட்டி குற்றம் சுமத்தி இருக்கிறார். இதனால் கும்மிடிப்பூண்டி சார் பதிவாளர் அலுவல வாசலில் மூதாட்டி சரோஜா காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.