அசுர வேகத்தில் வந்து மோதிய பைக்.. இளைஞரை பிடித்து வெளுத்தெடுத்த மக்கள் - அதிர்ச்சி காட்சி

Update: 2025-03-23 04:57 GMT

குடியாத்தம் அருகே அதிவேகமாக பைக் ஓட்டிவந்து விபத்து ஏற்படுத்திய இளைஞரை பிடித்த பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலையில் விலையுயர்ந்த பைக்கில் அதிவேகமாக வந்த 2 இளைஞர்கள் எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தை ஓட்டி வந்த அகிலன் என்பவரும், ஆட்டோவில் இருந்த ஷாயின் என்ற பெண்ணும் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய 2 இளைஞர்களையும் அருகிலிருந்த பொதுமக்கள் சுற்றிவளைத்த போது, பாலமுருகன் என்பவர் தப்பியோடிய நிலையில் புஷ்பராஜ் என்பவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்