செஞ்சி அருகே புயல் நிவாரண நிதி கேட்டு போராட்டம் செய்த மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மொடையூர், மணியம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், புயல்நிவாரண நிதி கேட்டு புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் இப்பகுதியை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வராத நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் புயல் நிவாரண நிதி வழங்காமல் தங்களை ஏமாற்றிவிட்டதாக கூறி வேதனை தெரிவித்தனர்.