ரத்த வெள்ளத்தில் மிதந்த பா.ஜ.க பிரமுகர்... சிக்கிய 10ம் சிறுவன் உட்பட மூவர்... அதிர வைக்கும் பின்னணி
ஒலகடம் பகுதியில் வசித்து வந்த 67 வயதாகும் செல்வராஜ், திருமணமாகாததால் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஊர் திரும்பிய நிலையில், கடந்த 24ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். புரவிபாளையம் பகுதியில் போலீஸ் வாகன தணிக்கையின்போது தப்பிக்க முயன்ற அசோக், திலீப் மற்றும் சிறுவன் சபரியை மடக்கிப்பிடித்து விசாரித்ததில், செல்வராஜ் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அசோக் ஒலகடம் பகுதிக்கு வந்து சென்றபோது செல்வராஜின் கை விரல்களில் மோதிரங்கள், கழுத்தில் செயின் மற்றும் கையில் பிரேஸ்லெட் அணிந்ததை பார்த்துள்ளான். செல்வராஜ் தனியாக வசிப்பதை அறிந்த அசோக், திலீப் மற்றும் சிறுவன் சபரியை நள்ளிரவில் அழைத்துக் கொண்டு செல்வராஜ் வீட்டிற்குச் சென்றுள்ளான். அசோக், செல்வராஜை துண்டைப் போட்டு கழுத்தை இறுக்கிய நிலையில், திலீப் கத்தரிக்கோலால் செல்வராஜின் கழுத்தில் குத்தியுள்ளான். இதனால் செல்வராஜ் உயிரிழந்த நிலையில், நகைகளை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளனர். மூவரையும் கைது செய்த போலீசார், நகை மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அசோக் மற்றும் திலீப்பை மாவட்ட கிளைச் சிறையிலும், சிறுவனை கோவை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.