தள்ளாத வயதிலும் திறமையை நிரூபித்த முதியோர் - மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

Update: 2024-12-29 11:35 GMT

ஈரோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான மூத்தோர் தடகள போட்டிகளில் 800 பேர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 39வது மாநில அளவிலான தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வஉசி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர், 90 வயதிற்கு மேற்பட்டோர் என பல்வேறு பிரிவுகளில், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், வட்டு ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் நபர்கள், ஜனவரி மாதம் மைசூரில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்