திடீரென நிறுத்தப்பட்ட தூர்வாரும் பணி..ஊருக்குள் புகுந்த வெள்ளம்..உச்சக்கட்ட கவலையில் விவசாயிகள்

Update: 2023-09-26 15:30 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியைத் தூர்வாரும் பணி 30 சதவீதம் கூட நிறைவு பெறவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது... கடந்தாண்டு இப்பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நெல் விவசாயம் செய்யாத நிலையில், ஏரியில் உள்ள வண்டல் மண் லாரி ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். ஏரியை ஆழப்படுத்த ஏரியில் உள்ள வண்டல் மண்ணை விவசாய நிலங்களுக்கு இலவசமாக வழங்கினாலே போதுமானது என்று அவர்கள் தெரிவித்தனர்... ஒரு வாரமாக வந்தவாசி, உத்திரமேரூர் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏரிக்கு நீர் வரத்து ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நீரை விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு அடையாத வகையில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கரையின் மத்திய பகுதியில் உடைபட்டு தொடர்ந்து நீர் வெளியேறி வரும் நிலையில், இதனால் விவசாய நிலங்கள், குடியிருப்புகள், சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எதிர் வரும் பருவ மழையால் நிலைமை இன்னும் மோசமாக வாய்ப்புள்ள நிலையில், தற்போது ஏரி தூர்வாரும் பணி நிறுத்தப்பட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்