வந்து இறங்கிய IT ஆபிஸர்ஸ்..பிரபல நகைக்கடை அதிபரின் இடங்களில் பரபரக்கும் ரெய்டு
திண்டுக்கல்லில் நகைக்கடை அதிபருக்கு சொந்தமான 3 நகைக்கடைகள் மற்றும் 2 வீடுகளில் இருபதுக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.திண்டுக்கல்லில் 75 வருடங்களுக்கு மேலாக மேற்கு ரத வீதியில் ஒரிஜினல் வாசவி நகைக்கடை செயல்பட்டு வருகிறது. கடையின் உரிமையாளர்களாக தினேஷ் மற்றும் அவரது தம்பி தீரேஜ் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமான மற்றொரு நகைக்கடை RS சாலையில் செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஒட்டன்சத்திரத்திலும் இவர்களுக்கு சொந்தமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தினேஷ் மற்றும் தீரேஜ்க்கு சொந்தமான மூன்று நகைக்கடைகள் மற்றும் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இருவரின் வீடுகளிலும் 6 கார்களில் வந்த 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 2வது நாளாக இன்றும் சோதனை நடைபெற்று வருகிறது.