துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடுத்தது.. "எங்களுக்கான அங்கீகாரம்“ -திருநங்கைகள் மகிழ்ச்சி
சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையம் மற்றும் நியாயவிலைக் கடைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கியதுடன், ஏழு திருநங்கைகளுக்கு ரேஷன் அட்டைகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரேஷன் அட்டைகளைப் பெற்ற திருநங்கைகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.