கர்ப்பிணி மனைவி கேட்ட இளநீர்... ஆசையை நிறைவேற்றிய நொடி...துடிதுடித்து பலியான கணவன் - ஷாக்கில் கடலூர்

Update: 2024-12-30 05:08 GMT

சிதம்பரம் அருகே கர்ப்பிணி மனைவிக்கு இளநீர் பறிக்க மரத்தில் ஏறிய கணவர், மின்சார கம்பியில் விழுந்து துடிதுடிக்க உயிரிழந்த சோகச் சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...

சிதம்பரம் அருகே தெற்கு திட்டை கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான ஆனந்தராஜ். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு நீதிகா என்ற பெண்ணுடன் திருமணமான நிலையில், அவர் கர்ப்பமாகியுள்ளார்.

சென்னையில் தனியார் கம்பெனியில் பணியாற்றி வரும் ஆனந்தராஜ், கருவுற்றுள்ள மனைவியை பார்க்க ஓடாக்க நல்லூர் கிராமத்திற்கு வந்துள்ளார்.

அப்போது மனைவிக்கு இளநீர் பறிப்பதற்காக, தென்னை மரத்தில் ஏறியுள்ளார். திடீரென எதிர்பாராத விதமாக, தவறி கீழே விழுந்த ஆனந்தராஜ், அருகில் இருந்த மின் கம்பத்தில் விழுந்துள்ளார்.

விழுந்த மறு கணமே, அவர் மீது மின்சாரம் பாய, சுய நினைவை இழந்துள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் சேத்தியாத்தோப்பில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால் அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டு அதிர்ந்து போன ஆனந்தராஜின் மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையிலேயே கதறி அழுத காட்சி காண்போரையும் கண் கலங்க செய்தது...

கருவுற்ற மனைவியை பக்குவமாய் பார்த்துக் கொள்ள நினைத்தவருக்கா இந்த நிலைமை என பலரும் வேதனை தெரிவிக்க, அவரின் குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டதாக சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்