மளிகை கடையில் வெடித்த ஃப்ரிட்ஜ்.. ஹாஸ்பிட்டலில் துடிக்கும் 3 உயிர்

Update: 2025-01-12 05:14 GMT

கடலூர் அருகே மளிகை கடையில் ஃப்ரிட்ஜ் வெடித்த விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வாழப்பட்டு பகுதியில் சண்முகம் என்பவர் நடத்தி வரும் மளிகைக்கடையில் நேற்றிரவு திடீரென பிரிட்ஜ் வெடித்துள்ளது. இதில் சண்முகம் படுகாயம் அடைந்த நிலையில், பொருள் வாங்க வந்த ஒரு பெண் உள்பட மேலும் இருவர் காயம் அடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்