தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் ராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் தங்களது பஞ்சாயத்து யூனியன் பதவிக்காலம் வரும் டிசம்பர் வரை உள்ளதால் சிறப்பு அதிகாரிகள் நியமித்து பிறப்பித்த அரசாணை சட்ட விரோதமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பஞ்சாயத்து ராஜ் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளார்.