ஆதித்யா ராம் குரூப்பின் சேர்மன், மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபரான ஆதித்யா ராம், ஏழை எளிய மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஈ.சி.ஆரில் அமைந்துள்ள தனது ஆதித்யா ராம் அரண்மனை முன்பாக சென்னையை சேர்ந்த ஏராளமான ஏழைகளுக்கும், ஆதரவற்ற முதியோருக்கும் அரிசி, மற்றும் பொங்கல் பொருட்கள் உள்ளிட்டவற்றை வழங்கி பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்... திரளான மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பொங்கல் உதவிகளைப் பெற்றுச் சென்றனர்.